Monday, June 28, 2021
டீ கடை
ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத எத்தனையோ விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த டீ கடையும் அதன் பெஞ்சுகளும்..........
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு டீ கடைகளில் மேல் அழியாததொரு பாசம் உண்டு.....
கல்லூரிக்கு போக ஆரம்பித்த நாள் முதல் டீ கடைகள் தான் சொர்க்கம்....... ஒவ்வுறு ஊரிலும், ஏரியாவிலும் ஒரு குறிப்பிட்ட டீ கடைகள்...... அந்த கடைகளில் வளர்ந்தது கற்றது நிறைய உண்டு..... மணப்பாறை வெண்ணிலா டீ ஸ்டால், விநாயகா டீ ஸ்டால், திருச்சி காஜாமலை நாகநாதர் டீ ஸ்டால், தில்லை நகர் விநாயகா டீ ஸ்டால், உறையூர் விநாயகா டீ ஸ்டால், சத்திரம் பேருந்து நிலையம் காயத்ரி டீ ஸ்டால், ஆதம்பாக்கம் பேருந்து நிலையதிருக்கு எதிரே உள்ள டீ ஸ்டால், ஸ்பென்செர் ப்ளாசாவிலுள்ள குட்டி டீ ஸ்டால் என என் வாழ்க்கையோடு எப்பொழுதும் தொடர்புடைய எத்தனையோ டீ கடைகள்...... இந்த கடைகளில் நான் செலவழித்த நேரங்கள் என் வாழ்வின் இனிமையான தருணங்கள்...... நினைத்தாலே இனிக்கும் இனிய நினைவுகள்........
மணப்பாறையில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது பெரும்பாலான நாட்கள் செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது வழக்கம். ஆனால் படம் முடிந்தவுடன் நான் நேரே போகும் இடம் வெண்ணிலா டீ கடைதான்...... நானும் என் நண்பன் ஜானகிராமனும் கொட்ட கொட்ட பனியில் விழித்து நேரம் போவது தெரியாமல் அந்த சினிமாவை எங்களுக்கு தெரிந்தவரையில் அக்கு வேறு ஆணி வேறாக அலசி எடுப்போம். அந்த டீ கடைகாரரும் எங்களை கேட்காமலே ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு டீ கொண்டுவந்து கொடுத்து விடுவார்...... சில நாட்கள் எங்களிடம் பணமே இருந்ததில்லை ஆனால் அப்பொழுதும் அவர் டீ கொடுப்பதை நிறுத்தியதில்லை..... அவர் முதல் வாங்கிய பால் அடுத்த நாள் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரை தாங்கும. இதில் விசேஷம் என்னவென்றால் முதல் நாள் மாலையில் இருந்து சுண்டிப் போய் அந்தப் பாலின் சுவை கிட்டத்தட்ட பால்கோவா போலிருக்கும். யாரேனும் அந்த நேரத்தில் டீ குடித்திருந்தால் கண்டிப்பாக உணர்திருப்பீர்கள்...... அந்த டீ கடையின் நைட் மாஸ்டர் ஒரு அரை மணி நேரம்தான் தூங்குவார்...... நான்கு மணிக்கும் படுத்தால் நாலரை மணிக்கு எழுந்து விடுவார்.... மீண்டும் அவரது முதல் போனி நாங்கள்தான்...... என்னுடைய முதல் காதலை பற்றி பேசிப் பேசியே பல இரவுகள் உறக்கமின்றி போயிருக்கிறது..... காலை ஐந்து மணிக்கு படுத்து காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழுந்து தாமதமாக மட்டுமே கல்லூரி சென்று வந்ததுண்டு.......
சமீபத்தில் ஒரு ஜப்பானிய படம் பார்க்க நேர்ந்தது........... யதார்த்தமாக பார்க்க ஆரம்பிக்க படம் அற்புதமாக இருக்கவே தொடர்ந்து பார்த்தேன்......... இயற்கையை அழித்து புதிய சக்திக்களை கண்டுபிடித்து விட்டதாக எண்ணி செருக்கு கொள்ளும் மனித இனத்திற்கான பாடம் இந்த படம். ஒரு ஜப்பானியனின் கனவுகளில் செயற்கை சக்திகளால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளக்குவதாக அமைந்துள்ளது படம். அவன் காணும் மூன்று வெவ்வேறு கனவுகள்தான் இந்த படம்.
கனவு :
செயற்கை உரங்களை பயன்படுத்தி பயன்படுத்தி நிலங்கள் அனைத்தும் நச்சு தன்மையுள்ளதாகி போகிறது. கனவு காணும் நபர் ஏதோ வேற்று கிரகத்தில் உள்ளதை போல உணர்கிறார். கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களோ மரம் செடி கொடியோ கண்ணில் படவில்லை. வெகுதூரம் நடந்த பின்னர் ஒரு விகாரமான் மனிதனை காண நேர்கிறது. அவருடன் பேசுகிறார் நாயகன். உரையாடல் பின் வருமாறு:
நாயகன்: நீங்கள் யார்?
அ.நபர்: நானும் மனிதன்தான்........
நாயகன்: நீங்கள் ஏன் இப்பட இருக்கிறீர்கள்?
அ.நபர்: எல்லாம் இந்த புத்தி கெட்ட மனிதர்களின் கண்டுபிடிப்பால் வந்தது.........
நாயகன்: ஏன்?
அ.நபர்: ஆம்..... எல்லாம் அவர்கள கண்டுபிடித்த ரசாயன உரங்களின் விளைவுகள்தான்...... இப்பொழுது இந்த நாடே விஷநிலமாக மாறி பொய் விட்டது...... அந்த உணவுகளை உண்ட மனிதர்கள் என்னை போல் மாறி விட்டனர்...... அனைவருக்கும் தோல் வியாதி, உடல் குறைபாடுகள், உடம்பெல்லாம் சுருங்கி இப்படி அகோரமாகி விட்டனர்....... பெரும்பாலானோர் இறந்து விட்டனர்......... ஒரு காலத்தில் இந்த நாடே அழகாக இருந்தது..... மக்கள் மகிழ்ச்சியாக ஊரெங்கும் பசுமையாக வாழ்ந்தோம்......... எல்லாம ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவு........ இப்பொழுது நாங்கள் நினைத்தாலும் எங்களால் இறக்க முடியாது....... இந்த கொடுமைகளையெல்லாம் அனுபவித்து நொந்துதான் சாக வேண்டும்.........
(அப்பொழுது சற்று தூரத்தில் சில மனிதர்களின் மரண ஓலம் கேட்கிறது)
நாயகன்: அது என்ன அங்கே சத்தம்?
அ.நபர்: மாலை குறிப்பிட நேரமாகி விட்டால் அவர்களின் உடம்பிலுள்ள திசுக்கள் எரிச்சல் தர ஆரம்பிக்கும்...... அரிப்பை நிறுத்த முடியாது...... சொரிந்து சொரிந்து ரத்தம்தான் வரும்...... அனால் இதை தடுக்கவும் முடியாது...... இப்படி செய்து செய்தே மக்களின் ரத்தால் அந்த பகுதியில் ஒரு ரத்த குளமே உறவாகி விட்டது.... இப்பொழுது அதுதான் எங்களுக்கு குடிநீரும் கூட.......
நாயகன்: உங்களுக்கும் உந்த வியாதி உண்டா?
அ.நபர்: ஆம்..... நீ இங்கிருந்து போய் விடு..... இல்லையென்றால் உனக்கும் இது பரவி விடும்......... நீயாவது பசுமையான ஜப்பானை உருவாக்க பாடு படு.....போ! போ!
நாங்கள் செய்த தவறுகளுக்கு நாங்க அனுபவிக்கிறோம்........
நாயகன்: நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்?
அ.நபர்: இங்கு நீ பார்க்கிறாயே மனிதர்கள்..... இவர்கள்தான் அந்த உரங்களை கண்டு பிடித்தவர்கள்....... இவர்களைத்தான் இந்த நாடு கடவுளாக பார்த்து........ ஆனால் இவர்கள் இந்த நாட்டையே நரகமாகி விட்டார்கள்....... அதற்கான தண்டனைதான் இது...... மற்ற மக்கள் இறந்தாலும் இவர்கள் இப்படி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருகிறார்கள்....... அந்த உரங்களை கண்டுபிடித்த விஞ்ஞானி குழுவில் நானும் அடக்கம்........
வேட்டைக்காரன் விமர்சனம்
நேற்று உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
அவர் கேட்டார் "வேட்டைக்காரன் பாத்துட்டியாமே?".
"ஆம்" என்றேன்.
அதற்கு அவர் கூறினார் " இனிமேல் நீ எப்பொழுதும் வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது எங்களிடமோ வழக்கம்போல் உன் கோபத்தை காட்டக்கூடாது. எந்த காரியத்தையும் உடனே செய்ய சொல்லி அவசரப் படுத்த கூடாது.............. தைரியமான முடிவுகள் எடுக்கவும் தாமதிக்க கூடாது!"
"ஏன் திடீர்னு இதையெல்லாம் என்கிட்டே சொல்றீங்க?" என கேட்டேன்.
"இல்ல உனக்கு வேட்டைக்காரன் பாக்குற அளவுக்கு பொறுமையும் தைரியமும் இருக்கப்போ மத்த இடங்கள்ல எப்டி அது இல்லாம போகும்? ...... என்ன நான் சொல்றது சரியா?"
"சரீங்க்னா" என்றேன்.
"ஒரு வேளை சுறா ஹிட் குடுத்தா பாக்கலாம்ல?" என்று கேட்டேன்.
"சுறா வச்சு வேணும்னா புட்டு தரலாம் ஹிட் குடுக்க முடியாதுடா அம்பி!" னு சொன்னார்.
"சரி மாமா நான் அப்புறம் பேசுறேன்" என்று சொல்லி வைத்து விட்டேன். வேறென்ன சொல்வது?
மக்களின் எண்ணம் விஜய்க்கு மட்டும் ஏன் தெரிய மாட்டேங்குது? இதன் இப்போ மைண்ட்ல ஓடிட்டு இருக்க மில்லியன் டாலர் கேள்வி.
வில்லு - விமர்சனம் அல்ல.
பொதுவாக திரைப்படங்களுக்கு என்னுடைய வலைப்பதிவில் விமர்சங்கள் எழுதியது கிடையாது. ஏனென்றால் எனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகரை பிடிக்கும் அதனால் என்னையும் அறியாமல் சில விஷயங்கள் ஒரு"தலை" பட்சமாக அமைந்து விட வாய்ப்புகள் உண்டு. மேலும் நான் உண்மையை கூறினாலும் அது ஒரு"தலை" பட்சமாகத்தான் கருத்தில் கொள்ளப்படும். மக்களை சென்றடையவும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் திரைப்படம் ஒரு மிகசிறந்த ஊடகம். குத்துப்பாட்டும் கவர்ச்சியும் இருந்தால்தான் படம் வெற்றியடையும் என்பது மிகவும் தவறான ஒரு கருத்து.
நமது இளைய தளபதியிடம் நீண்ட நாட்களாக ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அதாவது வணிக திரைப்படங்கள்தான் வெற்றி பெரும் மேலும் அதுதான் நமக்கு சரிவரும் என. ஆனால் அதுவல்ல உண்மை........ வணிக திரைப்படம் கலைப்படம் என்று பாகுபாடெல்லாம் கிடையாது..... இரண்டே சினிமாதான் உண்டு ஒன்று மக்களுக்கு பிடித்து இன்னொன்று மக்களுக்கு பிடிக்காதது. அதற்காக விஜயை "ஹேராம், அன்பே சிவம், சொல்ல மறந்த கதை, குசேலன், பச்சைக்கிளி முத்துசரம்" போன்ற படங்களில் நடிக்க சொல்லவில்லை. நல்ல கதையுடன் வணிக விசயங்களும் அடங்கிய சேது, முகவரி, காதல் கோட்டை, சந்தோஷ் சுப்பிரமணியம், சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி, காக்க காக்க போன்ற படங்களில் நடிக்கலாமே!!!!! தொடர்ச்சியாக இல்லையென்றாலும் அவ்வப்பொழுது....... ஏன் அவர் நடித்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரெண்ட்ஸ், பிரியமானவளே, பத்ரி படங்களை விடவா மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு படங்கள் மக்களுக்கு பிடித்து விட்டது????? நிச்சயமாக இல்லை..... மகேஷ் பாபுவின் தயவால் வந்த கில்லி, போக்கிரி இரண்டு படங்களும் வராமல் இருந்திருந்தால் ஒரு வேலை உணர்ந்திருப்பரோ என்ன என்னவோ?
வில்லு படம் வெளியான பின்பு வழக்கம்போல் எங்கள் நண்பர்களுக்குள் காரசாரமான விவாதம் தொடங்கியது. வேற்றுமொழி படங்களை பார்க்காமல் வில்லு முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு படத்தின் முதல் பாதி (மட்டும்) பிடித்திருக்கலாம். ஏனென்றால் இந்த படம் ஆரம்பித்து சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின்புதான் படத்தின் கதை என்ன என்பதை பற்றி பேச துவங்குவார்கள். ஆனால் இந்த ஒரு மணி நேரத்தில் வரும் காட்சிகளில் "அத்தடு" என்ற தெலுங்கு படத்தில் இருந்து ஒரு சண்டை காட்சி, "ஸ்டாலின்" படத்தில் இருந்து ஒரு காட்சி மற்றும் டயலாக்குகள், "சங்கர் தாதா" படத்தில் இருந்து இரண்டு பாடகள், பின் பாதியில் "ஜல்சா" படத்திலிருந்து இரண்டு பாடல்கள், "சோல்ஜர்" படத்தின் கதை இவற்றின் ஒட்டு மொத்த கலவைதான் "வில்லு". இவை அனைத்தும் தெரிந்து இந்த படத்தை பார்த்து பின் வில்லு பார்க்கும் ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும் என யோசித்தால் எனது ஆதங்கம் உங்களுக்கு தெரியும். ஒரு வேளை "அறியாமைதான் இன்பம்......... அறிவது தவறு" என்னும் பழந்தமிழ் கூற்று சரிதானோ?????
விஜய் போன்ற நடிகர்கள் இன்னும் எவ்வளவோ நல்ல படங்களில் நடிக்கலாம் என்பதுதான் கருத்தே தவிர அவர் மோசமான நடிகர் என்பதல்ல. எனக்கு இதுதான் சரி வரும் என்று அவர் முடிவு செய்து கொண்டு அவரை அவரே ஒரு வட்டதிருக்கு சுருக்கி கொண்டு இருக்கிறார். ஆனால் அவரால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க முடியும் என்பதே உண்மை. ஓடாத படங்களை வெற்றி படங்களாக கட்டிக்கொள்வதில் அவருக்கு இருக்கும் முனைப்பு நல்ல படங்களின் மீது திரும்பினால் அந்த அவலங்கள் தேவையிருக்காது. சமீபத்தில் நண்பர்களுக்குள் அனுப்பிய மின்னஞ்சல் தொகுப்பில் நண்பர் ஒருவர் சொன்னார் "படம் இருநூறு நாள் ஓடும் ஆனால் மதுரையில் பத்து நாள்தான் ஓடியது சேலத்தில் பதினாறு நாள்தான் ஓடியது என்று நான் கணக்கு சொல்வேன் என்று". அவரை பொறுத்த வரையில் அவருக்கு விஜய் படம் பிடிக்கிறது அவர் கண்களில் நூறாவது நாள் போஸ்டர் தெரிகிறது. அவர்கள் அதற்குமேல் எதையும் தெரிந்து கொள்வதில்லை. உதாரணதிருக்கு "அழகிய தமிழ் மகன்" படம் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. சென்னை ரிலீஸ் உரிமம் பொதுவாக விஜய் கைகளில்தான் இருக்கும் [நூறு நாள் ஓட்ட எளிதாக]. ஆனால் இந்தமுறை பிரமிட் சாய்மீரா அவர்களே ரிலீஸ் செய்தனர். விளைவு படம் ஐந்து வாரங்களுக்கு மேல் ஓடவில்லை. விடுவாரா நம் விஜய் படத்தை எ.ஜி.எஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கி மீண்டும் சாய் சாந்தி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் போஸ்டர் அடித்து பட்டையை கிளப்பினார்கள். அந்த நபருக்காக அவர் ஆசைப்படியே இதோ ஆதாரம்:
இதே போல் ஒவ்வொன்றிற்கும் ஆதாரத்துடன் பேச முடியும். ஆனால் இதுவல்ல நமது வேலை. இப்பொழுது மக்கள் முன்பு போல் இல்லை எல்லாவற்றையும் உற்று நோக்க துவங்கிவிட்டார்கள் என்பதையும் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். ஐந்தாவது வாரமே அனைத்து அரங்குகளிலும் ஒரு காட்சிக்கு வந்த திரைப்படம் நூறு நாள் ஓடி வெற்றிகண்ட பெருமை விஜய் அவர்களை மட்டுமே சாரும். சக போட்டியாளர் அஜித் படங்கள் எத்தனையோ ஓடாமல் போயிருக்கின்றன எத்தனையோ ஐம்பது நாட்கள் கடந்து சராசரி வெற்றி பெற்றிருக்கின்றன ஆனா ஒரு போதும் அவர் இது போன்ற செயலை செய்ததில்லை. இது பற்றி அபிராமி தியேட்டர் உரிமையாளர் "அபிராமி ராமநாதன்" அவர்களே கூறியிருக்கிறார். அவர்களது திரையரங்கில் பரமசிவன் திரைப்படம் அறுபது நாட்கள் நன்றாக ஓடி பின்பு கூட்டம் குறைந்தவுடன் அவரே ஒரு காட்சிக்கு மாற்றி நூறு நாள் [லாபம் தந்த படமாதலால்] ஓட்ட முடிவு செய்தபோது அஜித் போன் செய்து ஏன் இப்படி ஒரு காட்சி ஒட்டுகிறீர்கள் ஓடவில்லை என்றால் பரவாயில்லை உங்களுக்கு லாபம் தந்தால் அது போதும் என்று கூறியதாக கூறினார். இப்பொழுது ஏகன் படம் கூட எழுப்பதைந்து நாட்களுக்கு பிறகு விளம்பரம் வரவில்லை. எழுப்பதைந்து நாட்கள் ஓடிய படத்தை நூறு நாள் படமாக மாற்றுவது ஒரு எளிதான வேளை ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படத்தின் தகுதி அவ்வளவுதான் என்பதுதான் உண்மை. இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.
வில்லு பார்க்கும் பொழுது ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. விஜய் ஆட சொன்னால் வரிந்து கட்டி கொண்டு நிற்கிறார், காமெடி பண்ண மிகவும் ஆசைப்படுகிறார். ஆனால் கதை என்றால் கௌண்டமணி ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் "டென் ஸ்டெப்ஸ் பேக்". வருத்தப்பட வேண்டிய இன்னொரு விஷயம் [அவரும், மக்களும்] வில்லு என்னுடைய ஐம்பதாவது படமாக இருந்திருக்கலாம் என ஆதங்க படுகிறார். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் சமீபத்தில் சிஃபி.காம் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அடுத்த படத்தின் கதை என்ன என்று ஒரு ரசிகர் கேட்டதிற்கு கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் "ஏறத்தாழ திருப்பாச்சி போன்ற கதைதான்" என்று சொல்லியிருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)