Thursday, May 28, 2009

முன்னும் பின்னும்.....

பக்குவப்படாமல் இருக்கும் வயதில் காதல் கொண்டால்.......
அது ஒரு மாய உலகம்...... உவமைகள் யாவும் உண்மைகளாய் தெரியும்......
உற்றோர் உறவினர் தெரியாது...... சுற்றிலும் நடப்பது புரியாது.......
காத்திருந்த காலங்களை கணக்குப்போட்டு பார்க்க முடியாது......
உங்கள் பாதச் சுவடுகள் மட்டுமே உலகெங்கிலும் உள்ளதாய் உணர்வாய்.....
இயற்கையின் அழகை விட காதலி முகம் அழகாய் தெரியும்.....
உணவு தராத நிறைவை அவள் புன்னகை மட்டுமே தரும்.......
வீட்டிலிருக்கும் கஷ்டங்கள் தராத வலியை அவளது ஒரு சொட்டு கண்ணீர் தந்து விடும்......

பக்குவப்பட்டு பின் காதலும் வந்து விட்டால்......
காத்திருக்கும் பொழுது வீணாகும் நேரத்தை பற்றிய சிந்தனை ஆட்கொள்ளும்.....
அவள் மட்டுமே அழகு என பொய்யாகவாவது நீ சொல்வாய் என அவள் எதிர்பார்க்கையில்........ உலகிலேயே பெரிய எதார்த்தவாதியாக நீ மாறியிருப்பாய்....
திருமணம் செய்துகொள்ள அவள் அழுதாலும்....... அவள் கண்ணீருக்கு பின்னே உன் குடும்பம் கண்களாய் தெரியும்.....

பக்குவப்படாமல் காதல் கொண்டு பின் பக்குவப்பட்ட பின்பும் காதல் கொண்டால்....
வாழ்க்கையை எதிர் கொள்வது சற்றே கடினம்தான்......

Monday, May 4, 2009

படித்ததில் பிடித்து சிரித்தவை............

நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில்:

கேள்வி: நீங்கள் என் அரசியலுக்கு வரக்கூடாது?
பதில்: இல்லை.... எனக்கு சுமாராகத்தான் நடிக்க வரும்...... அந்த அளவுக்கு நடிக்க வராது......

நடிகர் பார்த்திபனின் கிறுக்கல்கள் தொகுப்பிலிரிந்து:

கேள்வி: எலக்சன்ல சீட் கிடைச்சா நிப்பீங்களா?
பதில்: சீட் கிடச்சா ஏன் நிக்கனும்..... நல்லா உக்காரலாமே........

சர்ச்சிலின் நகைச்சுவை:

சர்ச்சிலின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் சிறு பாலத்தைக் கடக்கும்போது எதிரில் வந்தவர் வழி கொடுக்காமல், "நான் முட்டாள்களுக்கு வழி கொடுப்பதில்லை" என்றாராம். சர்ச்சிலோ உடனே, "நான் முட்டாள்களுக்கு வழிவிடுவேன்" என்று சொல்லி வழி விட்டாராம்.



நடிகரும் இயங்குனருமான விஜய டி. ராஜேந்தர் ஒரு பேட்டியில்:

கேள்வி: வீராச்சாமிக்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க?

பதில்: என்னோட அடுத்த படம் ‘ஒருதலைக் காதல்’. 1979-ல் ‘ஒருதலை ராகம்’ எடுத்தேன். 2009-ல் ‘ஒருதலைக் காதல்’ எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப் பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன். இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல? இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.

‘வீராச்சாமி’யில நான் ஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் ‘ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?’ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக ‘டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்’னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல… அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!