Monday, January 12, 2009

அவமானம்

முதன் முதலாக துபாய் செல்லும்போது நிகழ்ந்த சம்பவம் இது. சென்னையிலிருந்து நேரடியாக டிக்கெட் கிடைக்காததால் சென்னை-மும்பை மும்பை-துபாய் செல்லுமாறு முன்பதிவு செய்திருந்தேன். இரவு எட்டு முப்பதுக்கு மும்பைலிருந்து விமானம். காலை ஆறு மணிக்கெல்லாம் சென்னையிலிருந்து கிளம்பி மும்பை சென்று அங்கிருக்கும் சில நண்பர்களையும் சந்தித்து விட்டு மாலை மும்பை விமான நிலையம் சென்றடைந்தேன். வழக்கமான பரிசோதனைகள் எல்லாம் முடிந்து விமானத்தில் வந்து அமர்ந்தேன். என்னுடைய இருக்கை சன்னலோர இருக்கையாக இருந்தது. எனக்கு அருகில் ஒரு பத்து வயது மதிக்கதக்க சிறுவனும் அவனுக்கருகில் ஆறு வயது நிரம்பிய சிறுமியும் இருந்தார்கள். அவர்களது பெற்றோர் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தனர். அந்த சிறுமி தன்னுடைய அண்ணனிடம் சன்னலோர இருக்கை வேண்டுமென அடம்பிடித்து கொண்டிருந்தாள். எனக்கு நானும் என் தங்கையும் இருந்த சிறுவயது ஞாபகம் வந்தது அதுமட்டுமின்றி அச்சிறுமியை பார்க்க பாவமாய் இருந்ததால் நான் அந்த சிறுவனிடம் கூறினேன் "வேண்டுமானால் என் இருக்கையை உன் தங்கையை எடுத்து கொள்ள சொல். நான் அடுத்த இருக்கைக்கு மாறிக்கொள்கிறேன்". அதற்கு அந்த சிறுவன் கூறினான், "நான் எப்படி என் தங்கையை வேறு ஒருவன் பக்கத்தில் அமர வைக்க முடியும்?".