Tuesday, September 14, 2010

கமல்ஹாசன் - நிகழும் அற்புதம்!




வழக்கம்போல் அலுவலகம் வந்தவுடன் ஜி மெயிலில் உள்ளே நுழைந்து புதிய மின்னஞ்சல்களை பார்த்த பொழுது எனது சகோதரனிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் என்னை ஈர்ப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால் அது நமது பத்மஸ்ரீ கமல்ஹாசனை பற்றியது. அந்த மின்னஞ்சலில் வந்த விவரங்களை கீழ்காணும் முகவரிகளில் நீங்கள் காணலாம்:

http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.html
http://www.karundhel.com/2010/09/blog-post.html

இந்த வலைப்பதிவுகள் கமல்ஹாசனை பற்றியும் அவரது முக்கியமான பல படங்கள் ஆங்கில மற்றும் பிறமொழி படங்களின் காப்பி என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க
துடித்து கொண்டிருந்தது. உண்மைதான்! அந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தபடி அவரது பல முக்கியமான படங்கள் பல்வேறு ஆங்கில படங்களின் தழுவல்கள்தான். ஆனால் இதன் மூலம் கமல்ஹாசன் ஒரு உன்னை கலைஞன் அல்ல என்றும் அவர் வெறும் காப்பி அடிப்பவர்தான் என்றும் நிச்சயமாக ஒத்துகொள்ள முடியாது. முதலில் எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு கமலின் நோக்கம் வெறுமனே காப்பி அடிப்பது மட்டுமல்ல மேலும் அவர் மற்றவர்களை போல சினிமாவை வெறும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதும் இல்லை. காப்பி அடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் எத்தனையோ வச்சொளை வாரிக்குவித்த வெற்றிப்படங்களை அவர் தழுவி எடுத்திருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் அவர் பார்த்த உலகத்தரமான படங்கள் தமிழிலும் வர வேண்டும் என்பதுதான். மேலும் எந்த படமும் ஈஅடிச்சான் காப்பி என்று எவராலும் குறிப்பிட முடியாது. அது மட்டுமில்லாமல் அந்த படங்களில் நடிக்க எவராலும் முடியாது என்பது எனது பணிவான மற்றும் திமிரான கருத்து. ஏன் ராஜபார்வை, குணா, நம்மவர் போன்ற படங்களை ரஜினியோ இல்லை மற்ற நடிகர்களோ முயற்சி செய்து பார்க்க வில்லை? ஏனென்றால் இங்கு யாருக்கும் தைரியம் இல்லை. தங்களுக்கென இருக்கும் வியாபாரத்தை கெடுத்து கொள்ள யாருக்கும் துணிவில்லை. அந்த வகையில் பல்வேறு உலகத்தரமான படங்களை இந்திய மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தது கமலுக்கு பெருமைதான். இதில் வெட்கப்படவோ தலை குனிவதற்கோ ஒன்றும் இல்லை. முக்கியமான படங்கள அனைத்தும் காப்பி என்றால் தேவர் மகன், அன்பே சிவம், மகாநதி, ஹேராம், ஒரு கைதியின் டயரி, விக்ரம் இன்னும் எவ்வளவோ படங்கள் எல்லாம் முக்கியமான படங்கள் இல்லையா? இவை எல்லாம் எங்கிருந்து காபி அடிக்கப்பட்டது?. அமெரிக்க சினிமா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் அவர். எத்தனை தோல்விகள் கண்டபின்னும் சோதனை முயற்சிகளை கைவிடாமல் இன்னும் தரமான படங்களை தரத் துடித்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான கலைஞனை காப்பி என்ற ஒரு வார்த்தையால் கண்ட சாக்கடைகளோடு ஒப்பிட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்!

1 comment:

Mylsamy said...

Thanks for your valuable thoughts.

I agree with you!