Thursday, August 14, 2008

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு தமிழ் சிறுகதைகள் அடங்கிய பாடநூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கலாம் என எண்ணி ஆர்வமுடன் படிக்க தொடங்கினேன். அனைத்துமே அற்புதமான கதைகள், பெரும் நாவலாசிரியர்கள், தலைவர்கள் எழுதிய கதைகள். அதில் பல கதைகள் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை சுட்டி காடுவதாக இருந்தது. இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாடத்திட்டங்களை வைக்கும் இதே அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்கள்தான் அக்கதைகள். இதை படிக்கும் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களுக்கு இதன் பொருள் புரியுமா? இல்லை இதையும் மனப்பாடமாக படித்து எழுதிவிட்டு போவார்களா? இல்லை வழக்கம் போல் இதையும் படிக்காமல் விட்டு விடுவார்களா? இல்லை படித்து நாட்டை பற்றி கவலை கொள்வார்களா?

இதில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு உதாரணத்திற்கு ஒரு மாணவன் இதை ஆர்வமுடன் படித்து நாட்டை பற்றி கவலை கொள்கிறான் என்றால் பின்னாளில் அவன் இன்னும் பல நிகழ்வுகளை காணும்போது இன்னும் கவலை கொள்வான். ஆனால் மற்றவர்கள் அவனுக்கு அன்னியமாக படுவார்கள். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் தாமுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். இதில் கூட தவறில்லை. ஆனால் இன்னும் ஒரு புற மக்கள் தான் யாரென்று காட்ட வேண்டுமென்று வாழ்கிறார்கள். இன்னும் சிலர் யார் எக்கேடு கேட்டாலும் சரி நாம் நல்லபடியாக வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிறார்கள். இதையெல்லாம் விட கொடுமை முதலீடு இல்லாத தொழிலாக அரசியலை எண்ணி நாட்டையே குட்டி சுவராக்கி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

இவற்றின் விளைவுகள்தான்,
* மணல் கொள்ளை
* காடுகள் அழிப்பு
* லஞ்சம்/ ஊழல்
* அரசுடைமைகளை அழிப்பது
* கொலை/கொள்ளை

வைரமுத்து கவிதை போல "வானின் நீளம் கொண்டு வா! பேனா மையும் தீர்ந்திடும்" என்னும் அளவிருக்கு இந்த அக்கிரம/அநியாய பட்டியல் நீளும்.

இதன் மூலம் கூற வருவது ஒன்று மட்டும் தான். தயவு செய்து இது போன்ற கதைகளை பாட புத்தகத்தில் புகுத்தி அந்த ஒன்றிரண்டு மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி விட்டு பின்னாளில் அவர்கள் சமூகத்தின் மேல் கோபம் கொண்டு அக்கிரமங்களை தட்டி கேட்க முடியாமலும் அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாமலும் நொந்து நொந்து சாக வேண்டாம். இப்படி ஒரு பாடநூல் அவர்களுக்கு தேவையில்லை. சாதாரணமான இலக்கணமும் இலக்கிய கதைகளும் போதும்...........
அதுதான் அவர்களின் கற்பனையோடு நின்று போகும்........

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

3 comments:

Kamal said...

இந்த மாதிரி பாடங்கள் கொஞ்சமாவது இருப்பதால்தான் ஒன்னு ரெண்டு நல்லவங்க அரசியல்ல இருகாங்க...மேலும் நம்ம நாட்டோட அடுத்த தலைமுறையாவது ஒரு விழிப்புணர்வோடு வளரட்டுமே!!!!
ஒரு சின்ன திருத்தம்
//வானின் நீளம் கொண்டு வா! பேனா மையும் தீர்ந்திடும்"//
வானின் நீலம் .... நீளம் இல்லை...

Balaji said...

There is an absolute need in the society to enlighten the future generation about the evils that prevail...

But it need not pushed via text books; which form a compulsive part of children's lives. Rather its best to leave it as an option that can be sought if interested.

So I do agree that there is no need to include such texts in school curriculum.

Shreedhar said...

நல்ல ஒரு உரை! நீங்க ஏன் கரத்தி அரசியலுக்கு வர கூடாது? இருந்தாலும், நண்பர் கமல் எந்த அரசியல்வாதி நல்லவர்னு சொள்ளரார்னு புரியலை! ஆனால், அப்பிடி ஒருத்தர் இருந்த, அவர் கல்கி பகவன்க்கு சமமானவர்.

என்னுடைய கருத்து என்னவென்றால், நம் தேர்தல் முறை மாறவேண்டும். தேர்தல் வாக்குறிதிகள் மாற வேண்டும். தேறுதல் கோரிக்கைகள் / எதிர்பார்ப்புகள் மாறவேண்டும். இன்னும் நாம் நம்முடைய அதியவச்ய தேவைகளையே ithunai varudathirku பிறகும் குடிநீர் மின்சார ப்றேச்சனைகளுக்காக இந்த முறையாவது தீர்பார்கள் என்று இன்னும் ஜனநாயகத்தை வாழ வேய்துகொண்டு இருகிறார்கள். பாவம் நம் மக்கள். சீனா நமக்கு பின்னால் தான் சுதந்திரம் பெற்றது. ஆனால், நம்மைவிட மிகவிரைவில் முன்னேறி உள்ளது. அங்கும் மக்கள் இருகிறார்கள். அங்கும் ஜனநாயகம் இல்லை தான் ஆனாலும் அவர்கள் முன்னேறி உள்ளார்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்னொரு விஷயத்தை நாம் சொல்லலாம். இன்றைய 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையை பார்தேஇன். அதில் மத்திய மகளிர் membattu அமைச்சகம் வெளிஇட்ட அந்த சுதந்திர தின வாழ்த்து செய்தியை பார்தேஇன். கொடுமை! 1947-கும் 2008-கும் நேர வித்யாசம் இல்லை. இன்னும் நாம் நம் பெண்களுக்கு அவளவாக சுதந்திரம்...இல்லை இல்லை மரியாதை கூட கொடுப்பதில்லை. இன்னும், நம் சென்னை மாநகரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது!

ஆகவே, அரசியல்வாதிகளுக்கு ஏற்ற பாடல் என்றால், அது இது தான்: "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே..."

இறைவ, நீ இறங்கி வா! என்ன கொடுமை சரவணன் சார் இது?

அன்பன்
ஸ்ரீதர்