Thursday, December 27, 2007

இது இந்த நூற்றாண்டுக்கு

நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமா? அது மிகவும் எளிது.... அதற்கு நாம் செய்ய வேண்டியது இவைதான் ........ விட்டுகொடுங்கள், மற்றவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...... இயன்றவரை அமைதியாக இருங்கள் ........ விட்டுகொடுங்கள் என்றால் புத்தர்/சித்தார்த்தன் போல் எல்லாவற்றையும் விட்டு கொடுங்கள் என்று கூறவில்லை...... நாம் விட்டு கொடுப்பதால் நமக்கு ஒன்றும் பெரிய இழப்பு இல்லை என்றால், நாம் விட்டு கொடுத்தால் நம்மை சார்ந்தவர்களுக்கு நன்மை என்றால், விட்டு கொடுப்பதால் ஒரு பெரிய பிரச்சினை தடுக்கப்படும் என்றால் தயவு செய்து விட்டு கொடுங்கள். உதாரணத்திற்கு சிக்னலில் யாரிடமாவது நாம் வெட்டியாக சண்டையிட்டு எல்லோருக்கும் இடைஞ்சல் ஏற்படுத்துவது, உண்மையில்லை என்று மனதிற்கு தெரிந்தும் நம்முடைய வறட்டு கௌரவத்துக்காக வாதாடுவது போன்ற செயல்களை தடுக்கலாம். அடுத்து மற்றவரை புரிந்து கொள்ளுதல், அதாவது ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தை எந்த நோக்கில் கூறுகிறார் என்பதை புரிந்து கொண்டால் முக்கால்வாசி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். உதாரணத்திற்கு ஒரு உண்மையான விஷயத்தை நம்மிடம் ஒருவர் கூறும்போது அதை நாம் இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று நமக்கு பிடிக்காத விஷயத்தை நம்மை வெறுப்பேற்ற இவர் கூறுகிறார் என்று பார்க்கலாம், அதையே இன்னொரு நோக்கில் நமக்கு பிடிக்காத விஷயத்தில் இப்படி ஒரு உண்மை/ஆச்சரியம் உள்ளதா என்று ஆர்வமாக தெரிந்து கொள்ளலாம். சுருக்கமாக சொன்னால் உண்மையிலேயே நம்மை வெறுப்பேற்ற ஒருவர் கூறுவதையும் இல்லை அவர் நம்மிடம் ஒரு விஷயத்தை விரும்பி கூறுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது அமைதியாக இருங்கள், ஊமையாய் இருங்கள் என்று அர்த்தம் இல்லை. நம்முடைய அமைதி பிறருக்கு நிம்மதி தருமானால் அல்லது சில தேவையற்ற மனவருத்தங்களை தவிர்க்குமானால், நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாமல் இருக்குமானால் அமைதியாயிருங்கள். உதாரணத்திற்கு யாரேனும் நாம் கூறுவதை புரிந்து கொள்ளாமல் கோபபடுவார்களேயானால் அவர்களின் நிம்மதிக்கும் நமது மன உளைச்சலை தடுக்கவும் அமைதியாயிருங்கள்.

2 comments:

Unknown said...

ரொம்ப கரக்ட் டா KT... விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் சுகம் உள்ளது!!!!
அதனால் நீ சைட் அடிக்கும் பெண்ணை எனக்கு விட்டுக்கொடுத்துடு...
ஓகே யா. :))))))

Venkatesh R said...

நான் அமைதியா இருக்க முயற்சிக்கிறேன்